யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாது மதுபானத்தை கொள்வனவு செய்ய பொதுமக்கள் காத்திருந்தனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக அனைத்து மதுபான நிலையங்களும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை அரசாங்கத்தினால் மதுபானசாலைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, யாழ். குடாநாட்டில் உள்ள மதுபான நிலையங்களில் மது பிரியர்கள் மதுபானத்தை கொள்வனவு செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
சமூக இடைவெளியினை பின்பற்றி மதுபானத்தை கொள்வனவு செய்வதற்காக மது பிரியர்கள் நீண்ட வரிசையில் வீதிகளில் நின்று மழைக்கு மத்தியிலும் தமக்கு தேவையான மதுபானத்தினை கொள்வனவு செய்தனர்.
மதுபான நிலையங்களுக்குள் ஒருவர் மட்டுமே சென்று மதுபானத்தை கொள்வனவு செய்ய அனுமதிக்கப்பட்டது. எனினும் மதுப் பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானத்தை கொள்வனவு செய்தனர்.