கொழும்பில் வேலைத் திணைக்களகத்தில் தமிழர் ஒருவரிற்கு ஒதுக்கப்பட்ட்ட இடத்தில் தமிழ் என மூன்று மொழிகளிலும் எழுதி ஒட்டப்பட்டிருந்தது இரண்டு முறை இது கிழிக்கப்பட்டது இருந்தும் திரும்ப திரும்ப ஒட்டியிருந்தார் குறித்த தமிழர்.
ஏனனில் முழுமையாக சிங்கவர்களால் நிரம்பியிருந்த அலுவலகம் அது நான் ஒரு இலங்கைத் தமிழன் 2 இலங்கைச் முஸ்லீம் 1 மலையக தமிழர் மட்டுமே தமிழ் மொழி பேசுவோர் 63 பேர் கொண்ட அலுவலகத்தில்.
குறித்த சம்பவத்தால் பாதிக்கப் பட்ட தமிழர் கூறியது…
இதனால் முழமையாக அனைத்து விடயங்களும் சிங்களமயமாகவே இருக்கும். தெரிந்த ஆங்கிலத்தில் ஆரம்பத்தில் முயற்சித்தேன் ஆனால் அவர்கள் எவரும் தயாராக இல்லை தம் தாய் மொழியான சிங்களத்தை தவிர்த்து எம்முடன் மூன்றாம் மொழியில் கூடவெ கதைக்க. அவர்களின் நிலைப்பாடு நீ சிங்களம் பழகு என்று மிச்சம் தெரியும் தானே அவர்களின் வழமையான சிங்கள நாட்டு வியாக்கியானம் சொல்லுவாங்கள் கொஞ்சம் மேல் அதிகாரிகள் உங்கட தமிழ் கஸ்ரமானது அதால நீ சிங்களம் பழகு என்றார்கள்.
அப்ப தான் ஒரு பிளான் பண்ணினன் அதாவது
என் தேவை என்றால் நான் தெரிந்த சிங்களத்தையும் ஆங்கித்தையும் கலந்து கதைப்பேன் அவர்களுக்கு என்னிடம் கதைக்க வேண்டிய தேவை அல்லது வேலைகளை சொல்ல வேண்டும் எனில் என்னுடன் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் மட்டும் தான் கதைக்க முடியும் மாறி சிங்களத்தில் கதைத்தால் நான் தமிழில் தான் பதில் சொல்வேன் ஆரம்பத்தில் தடுமாறினார்கள் கோபம் கொண்டார்கள்.பின்னர் அலுவலக வேலைகளை நிறைவேற்ற வேண்டி இருந்தமையால் அதிகாரிகள் கூடியவரை ஆங்கிலத்திலும் ஏனையவர்கள் கொச்சைத் தமிழ் ஆங்கிலம் சிங்களம் கலந்தும் கதைக்க தொடங்கினார்கள்.ஏன் அறிவுறுத்தல்கள் உள்ளக சுற்றுநிருபங்கள் கூட ஆரம்பத்தில் தனி சிங்களத்தில் வந்து நான் ஒப்பமிட மறுத்து அன்று மட்டும் சோனக உத்தியோகத்தர் தமிழில் மொழி பெயர்த்து சொன்னதன் அடிப்படையில் ஒப்பமிட்டேன் பிறகு வருபவை பின்னால் ஆங்கில மொழிபெயர்ப்பும் வரும் நான் அதன் கீழ் தான் ஒப்பமிடுவேன்.
இவ்வாறான ஒரு நிலையில் தான் தமிழ் என்பதை தமிழ் ஆகவே ஆங்கிலத்திலும் அவர்களை கொண்டு ஒவ்வொரு எழுத்தையும் சிங்களத்திற்க்கான பதில் சொற்க்களை கேட்டு சிங்களத்திலும் எழுதி இவ்வாறு ஒட்டினேன்.
இவை எல்லாவற்றையும் நான் தனிய தான் செய்தேன் ஏனனில் சோனகருக்கும் மலையகத்தமிழ் உத்தியோகத்தருக்கும் சிங்களம் தெரியும் அதனால் அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டார்கள்.
இங்க யாழ்ப்பாணத்தில என்னடா எண்டால் மைலோ மாமாக்கள் அலுவலகங்களுக்கு போனால் இல்ல 3500 வடக்கு தமிழ் உத்தியோகத்தர்களை கொண்ட காக்கி உத்தியோகத்தர்கள் போனால் கூட எங்கட தமிழ் உத்தியோகத்தர்கள் விழுந்தடிச்சு தமக்கு தெரிந்த சிங்களத்தில பதில் சொல்லி #எல்லாம் சொல்லி தான் நிக்குறார்கள். அவ்வளவு ஆனந்தம் அவ்வாறு அவர்களுக்கு ஊழியம் செய்வதில்
அடேய்களா யாழ்ப்பாணத்தின்ட வடக்கு கிழக்கின்ட அரசகரும மொழியில 1வது தமிழ் தான்டாப்பா உங்களிட்ட தகவல் எடுக்க வாறவங்களும் அரச உத்தியோகத்தர்கள் தானே அப்ப அவயலுக்கும் அரசகரும மொழி தெரியத்தானே வேணும் ஏன்டாப்பா இப்படி ஆஹ்? அத விட கொடுமை சில அலுவலக பயன்பாட்டு பதிவு ஆவணங்களை தனிய சிங்களத்தில் வைத்தே பாவிக்கிறியல் அதுவும் அதை ஆங்கிலத்தில் நிரப்பி ஏன் தமிழ்ல தாங்க எண்டாே இல்லை ஆங்கிலத்தில் நிரப்புவதால் குறைந்தது அது ஆங்கிலத்தில் தான் தாங்க எண்டோ கேக்க மாட்டியலா அரச உத்தியோகம் என்றதுக்காக உரிமைகளையும் சுயமரியாதைகளையும் தாரைவார்த்தா செயற்படுவீர்கள் போங்கடா மிடில என தனது முகநுால் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.