நடிகை ஸ்ரேயா இன்ஸ்டாகிராமில் இலவசமாக லைவ் யோகாசன பயிற்சிகளை செய்து ரசிகர்களுக்கு யோகா பயிற்சி அளித்து வருகின்றார்.
தொடர்ச்சியான யோகா பயிற்சிகளுக்கு பிறகு, உலக யோகா தினம் வரவுள்ள நிலையில், ஸ்ரேயா அவரது நண்பர் சர்வேஷ் சஷி உருவாக்கியுள்ள சர்வா என்ற யோகா யோகா பயிற்சி செயலி பற்றி தெரிவிக்கும் வகையில், யோகா பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ பற்றி ஸ்ரேயா குறிப்பிடுகையில்,
“நான் யோகாவை நேசிக்கிறேன். யோகா என்னை முழுமையாக்குகிறது. அதனுடைய சக்தியை கொண்டாடுகிறேன். என்னுடைய நண்பர் சர்வேஷ் சஷி சர்வ யோகா ஸ்டுடியோஸ் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதற்கான முதல் ஆப் சர்வ ஆப் தொடங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.




















