வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட வெளிமாவட்ட மீனவர்கள் பத்து பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம், சிலாபம், மன்னார், கற்பிட்டி பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களே வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.
குறிப்பாக வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளில் வெளி மாவட்ட மீனவர்கள் ஈடுபட்டு வந்தனர். இதனால் அப்பகுதி மினவர்களுக்கும் வெளி பிரதேச மீனவர்களுக்கும் இடையில் தொடர்ந்து முரண்பாடுகள் நிலவி வந்தது.
இதன் தொடராக நேற்றையதினமும் கற்பிட்டியைச் சேர்ந்த மினவர்கள் வடமராட்சி மீனவர்களால் படிக்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டதால் அப் பகுதியில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்த நிலையில் நீரியல் வளத் திணைக்களமும் பொலிஸாரும் இணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு பிரச்சனையைச் சுமூகமாகத் தீர்த்து வைத்தனர்.
இந் நிலையில் வடமராட்சி கடற்பரப்பில் அத்து மீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டு வந்த வெளிமாவட்ட மினவர்களை கடற்கரையொர பாதுகாப்பு பிரிவினர் நீரியில் வளத் தணைக்களத்தினர் மற்றும் வடமராட்சி மினரவ்கள் இணைந்து இன்றும் கைது செய்தனர்.
இதில் படகுகள் உள்ளிட்ட உபகரங்களுடன் சுமார் பத்து பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்கின்ற நடவடிக்கைகயை நீரியல் வளத் திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.