கொழும்பில் காலாவதியான பொருட்களைப் பயன்படுத்தி Hand sanitizer எனும் கிருமி நாசினிகளை உற்பத்தி செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய மாலபே, தலாஹேன பிரதேசத்தில் காலாவதியான பொருட்களைப் பயன்படுத்தி கிருமிநாசினிகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று நுகர்வோர் அதிகாரி சபையினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு வகையான சுத்திகரிப்பு கிரீமில் ஒரு வகை வண்ண கலவையைப் பயன்படுத்தி கிருமிநாசினி தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த கிரீம் வகை 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலாவதியாகியுள்ளது.
இந்த கிரீம் வகையை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட Hand sanitizer எனும் கிருமிநாசினிகள் கடைகளுக்கு அனுப்புவதற்காக தயார் நிலையில் காணப்பட்டதென சுகாதார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனத்தை நடத்தி சென்ற சந்தேக நபர், இன்னமும் அந்த கிரும நாசினிகளை கடைகளுக்கு விடுவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட கிருமி நாசினிகளை அழிப்பதற்கு நடவடிக்கை டுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
தான் கொள்வனவு செய்த கீரீம் வகை காலாவதியாகிய பின்னர் கிருமி நாசினி தயாரித்து விற்பனை செய்வதற்கு தனக்கு எண்ணம் வந்ததாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
சுற்றிவளைப்பின் போது மீட்கப்பட்ட Hand sanitizer பெறுமதி 50 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பித் கொள்வதற்காக அதிகளவானோர் Hand sanitizer எனும் கிருமி நாசினியை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.