கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தொடர்ச்சியாக தொற்றுக்குள்ளானோர் இனங்காணப்படுவதனால் கொரோனா வைரஸ் பரவல் அலையாக கருத முடியாது. இதனை கொத்தணி பரவல் என்று கூறலாம்.
வேறு கொத்தணி பரவல் ஏற்பட்டபோது அவற்றைக் கட்டுப்படுத்தியதைப் போன்று இதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நிலைவரம் குறித்து தொடர்ந்தும் விளக்கமளித்த அவர் , இராஜாங்கனை, ஹபராதுவ மற்றும் வெலிகந்த ஆகிய பிரதேசங்களே தற்போது பிரச்சினைக்குரிய பிரதேசங்களாகக் காணப்படுகின்றன. இந்த பிரதேசங்களில் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
எனினும் போக்குவரத்துக்கள் அதிகமாகக் காணப்படுகின்றமையால் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றார்.