கணவன், மனைவி விவாகரத்து செய்து கொள்வது என்பது இந்த காலக்கட்டத்தில் அதிகளவு நடக்கும் விடயமாக உள்ளது.
இதற்கு காரணம் ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு குறைவது தான், அப்படி மனைவிக்கு கணவன் மீது குறைந்துவிட்டது என்பதை காட்டும் அறிகுறிகளை காண்போம்.
உடன் இருந்தாலும் உணர்வுரீதியாக தொலைவில் இருப்பது
ஒரு உறவில் சில நேரங்களில், ஆறுதல் மற்றும் பொருந்தக்கூடிய நிலை ஒரே மாதிரியாக இருக்கலாம், ஆனால் ஆரம்ப நாட்களில் இருந்த அன்பு தற்போது இல்லாமல் இருக்கலாம்.
உங்கள் மீது உண்மையான காதல் இல்லாமல் இருந்தாலும் உங்களை பிடித்திருப்பதாலும் உங்களுடன் இருப்பது வசதியாக இருப்பதாலுமே உங்களுடனான உறவை அவர்கள் தொடரலாம். உங்களுடன் வாழ விரும்புவதற்கான காரணம் உங்கள் மீதான காதலாக இருக்கும்போதும், பிற காரணங்களாக இருக்கும்போதும் உங்களால் அதனை உணர் முடியும்.
எப்போதும் முதலில் ஐ லவ் யூ சொல்வது கணவனாக இருக்கும்
காதல் என்பது இரண்டு நபர்களுக்கிடையில் தோன்றும் ஒரு அழகான பிணைப்பு, இதில் ஒருவரிடம் அந்த எண்ணம் இல்லையென்றாலும் அந்த உறவு கானல்நீர் போன்றதுதான். ஐ லவ் யூ’ என்று சொல்வது உறவில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு காதல் விவகாரத்தில் எல்லோரும் தேடும் ஆறுதலையும் உருவாக்குகிறது. இருப்பினும், இதைச் சொல்வது கணவன்மட்டுமே என்றால், உங்கள் உறவை பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.
மற்றவர்களிடம் அறிமுகப்படுத்துவது
ஒரு நபரின் வாழ்க்கையில் குடும்பம் மிக முக்கியமான உறுப்பு. அவரது குடும்பத்தினருக்கு உங்களைப் பற்றி தெரிந்தால், நீங்கள் இருவரும் ஒரே அழகான படகில் பயணம் செய்கிறீர்கள். ஆனால் உங்கள் கூட்டாளியின் குடும்பத்தினருக்கு முன்னால் நீங்கள் இன்னும் நண்பராக இருந்தால், அவர்கள் உங்களைப் பற்றியோ அல்லது உங்கள் உறவைப் பற்றியோ அவ்வளவு தீவிரமாக இல்லை என அர்த்தம்.