கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து இந்த வருடத்தின் இறுதியில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
இதுகுறித்து சீன ஊடகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“சீனாவின் தேசிய மருத்துவ நிறுவனமான சினோபார்ம் தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்து இவ்வருட இறுதியில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.
இம்மருத்துவ நிறுவனத்தின் இறுதிக்கட்ட பரிசோதனை அடுத்த மூன்று மாதத்திற்குள் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிக்கட்டமாக சுமார் 15,000 பேருக்கு இம்மருந்தைச் செலுத்தி சீனா பரிசோதிக்க உள்ளது.
சீனா, ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.