புதிய கல்விக் கொள்கை பற்றிய விழிப்புணர்வை மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் ஏற்படுத்த ஆன்லைன் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்று UGC உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை, அதில் உள்ள அம்சங்கள் குறித்த விழிப்புணர்வை நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள், பேராசிரியர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்று UGC உத்தரவிட்டுள்ளது.
வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூட்யூப் போன்ற சமூகவலைதளங்கள் மூலமும், ஊடகங்கள் வாயிலாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்த நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு UGC அறிவுறுத்தி உள்ளது. மேலும், ஆன்லைனில் கருத்தரங்குகள் உள்ளிட்டவற்றை நடத்தி, புதிய கல்விக் கொள்கை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும் எனவும் UGC தெரிவித்துள்ளது.




















