பணம் கொடுத்து வாக்காளர் அட்டைகளை வாங்கிய இருவர் பேருவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு வாக்காளர் அட்டைக்குத் தலா 5 ஆயிரம் ரூபா வீதம் வழங்கி பெற்றுக் கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் பயன்படுத்திய காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை, 2 சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


















