இத்தாலியில் சிறு இடைவேளைக்கு பின்னர் பல பகுதிகளிலும் கொரோனா மீண்டும் தலைதூக்கியுள்ளது சுகாதார நிர்வாகத்தை கவலையடைய செய்துள்ளது.
கடந்த சில வாரங்களாக புதிய நோயாளிகளின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி காணப்பட்டு வந்துள்ளது.
ஆனால் ஆகஸ்டு முதல் வாரத்தில் புதிதாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 190 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 53 சதவீதமும் கொரோனா பெருந்தொற்று முதலில் பரவிய வடக்கு இத்தாலி பிரதேசங்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இதே நிலை நீடித்தால் அக்டோபர் 15 வரை அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார அவசர நிலையானது டிசம்பர் 31 வரை நீட்டிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், இன்னொரு ஊரடங்குக்கான வாய்ப்புகள் இருப்பதை மறுக்க முடியாது எனவும் அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிரேசில், சிலி, பெரு, குவைத் உள்ளிட்ட 16 நாடுகளில் இருந்தும் பயணிகள் இத்தாலியில் வருவதை தடை செய்துள்ளனர்.




















