ஆப்பிள் நிறுவனம் தனது மொபைல் சாதனங்களுக்காக புதிய இயங்குதளப் பதிப்பினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இப் பதிப்பில் தரப்படவுள்ள சில புதிய அம்சங்கள் தொடர்பாக ஏற்கணவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
இவற்றில் பயனர்கள் ட்ராக் செய்யும் வசதியை தடுக்கக்கூடிய விசேட வசதியும் தரப்பட்டுள்ளது.
அதாவது முன்னணி இணைய நிறுவனங்கள் பயனர்கள் தமது இணையத்தளத்தினைப் பயன்படுத்தும்போது அவர்களை ரகசியமாக ட்ராக் செய்கின்றனர்.
அதேபோன்று அவர்கள் நகல் (Copy) செய்யும் விடயங்களையும் Clipboard மூலமாக அவதானிக்கின்றனர்.
இதன் காரணமாக பயனர்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கு ஆப்பிள் நிறுவனம் தனது இயங்குதளத்தில் புதிய வசதியை அறிமுகம் செய்கின்றது.
இவ் வசதியினைப் பயன்படுத்தி ட்ராக் செய்வதை நிறுத்திவைக்க முடியும்.
பேஸ்புக் நிறுவனமும் தனது விளம்பர உத்திகள் உட்பட மேலும் சில தேவைகளுக்காக இவ்வாறு பயனர்களை ட்ராக் செய்கின்றது.
எனவே ஆப்பிள் அறிமுகம் செய்துள்ள புதிய வசதியானது பேஸ்புக் நிறுவனத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே நம்பப்படுகின்றது.