முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு துணைப் பிரதமர் பதவியை வழங்குவது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் இணக்கம் எட்டப்படவில்லை என போக்குவரத்து அமைச்சர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
முன்னாள் ஜனாதிபதிக்கு துணைப் பிரதமர் பதவி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுவது குறித்து கட்சியில் கேட்டறிய வேண்டும்.
எமது கட்சியில் அது பற்றி எதுவும் பேசப்படவில்லை.
தேர்தல் காலத்திலும் அந்த அமைச்சு பதவி வழங்கப்படும், நீதியமைச்சு பதவி வழங்கப்படும், அவருக்கு இந்த அமைச்சு வழங்கப்படும் கூறினார்கள்.
வாக்குகளை பெற்றார்கள். தற்போது பதவிகள் கிடைக்காத போதுதான் பிரச்சினை எழுகின்றன.
தேர்தல் காலத்தில் வாக்குகளை பெற பல கதைகளை கூறுவது வழமை எனவும் காமினி லொக்குகே குறிப்பிட்டுள்ளார்.