தமிழ் தேசிய கூட்டமைப்பு (டி.என்.ஏ) தனது தேசிய பட்டியல் பதவிக்கு இரண்டு பேரை நியமிக்க முடிவு செய்துள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட தவராசா கலையரசன் விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்ற வதந்திகள் குறித்து அந்த ஆங்கில ஊடகம் பேச்சாளரை கேட்டபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் மேற்படி விடயத்தை தெரிவித்தார்.
அம்பாறையைச் சேர்ந்த கலையரசனின் நியமனம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் சந்தித்ததோடு, அந்தப் பதவிக்கு இருவரை நியமிக்கும் முடிவும் அங்கு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
முதல் இரண்டரை ஆண்டுகளாக கலையரசன் பதவியை வகிப்பார், அதன்பின்னர் மாவை சேனாதிராஜா அந்தப்பதவியை வகிப்பார். எனினும் வடக்கு மாகாண சபை தேர்தலில் மாவை போட்டியிட்டு முதலமைச்சர் பதவியைப் பெற்றால் இந்த ஏற்பாடு மாறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.