நுரையீரல் என்பது மனித உடலில் இருக்கும் மிக முக்கிய உறுப்பு ஆகும். இக்காலத்தில் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
ஏனெனில் நுரையீரலை பலப்படுத்திக் கொள்வதன் மூலம் பல தொற்றை எதிர்த்துப் போராடமுடியும்.
அதிலும் குறிப்பாக புகைப்பிடிக்காமல் இருப்பது, அன்றாடம் உடற்பயிற்சிகளை செய்வது மற்றும் காற்று மாசுபாட்டில் இருந்து விலகி இருப்பது மற்றும் உண்ணும் உணவுகளும் நுரையீரல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகிறது.
அதுமட்டுமின்றி சில உணவுகளை கூட எடுத்து கொள்ளலாம் இருப்பது நல்லது.
அந்தவகையில் நுரையீரலுக்கு தீங்கு விளைவுக்கும் உணவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொண்டால் போதும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- கார்போஹைட்ரட்டுகள் நிறைந்த உணவுகளான முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிளைத் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். சுத்திகரிக்கப்பட்ட பாஸ்தா, பிரட், அரிசி மற்றும் இனிப்புக்களை அதிகம் உண்பதைத் தவிர்த்திடுங்கள்.
- ப்ராக்கோலி, காலிஃப்ளவர் அல்லது முட்டைக்கோஸ் போன்றவற்றை உண்ட பின் வாய்வுத் தொல்லையை சந்தித்தால், அந்த காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.
- குளிர் காலத்தில் ஐஸ் க்ரீம் உட்கொண்டால் நிலைமை மோசமாகும். ஆகவே ஐஸ் க்ரீம் சாப்பிட்டு நீங்கள் சளி தொல்லையால் அவஸ்தைப்படுபவராயின், நுரையீரல் ஆரோக்கியத்திற்காக இந்த ஐஸ் க்ரீமை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.
- உருளைக்கிழங்கு சிப்ஸில் சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் உப்பு போன்றவை நிறைந்துள்ளதால், இது முழு உடலுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய ஓர் பொருளாகும். இதில் உள்ள அதிகப்படியான உப்பு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் தொடர்ச்சியான உயர் இரத்த அழுத்தம் இதய ஆரோக்கியத்தை சீரழிக்கும்.
- ஆல்கஹால் உடல் வறட்சிக்கு பங்களிப்பதால், உங்கள் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைத்தால், இதனை தவிர்ப்பது அவசியமாகும்.




















