வாய் என்பது பற்கள், ஈறுகளை உள்ளடக்கியது. வாயின் வழியாகத் தான் நாம் உண்ணும் உணவுகள் உடலுக்குள் செல்கிறது.
எனவே நுழைவாயிலாக இருக்கும் வாயை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது நமது ஒவ்வொருவதும் கடமை ஆகும்.
அதிலும் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதே முக்கியம். ஏனெனில் நாம் உண்ணும் சில உணவுகள் மற்றும் பானங்கள் பற்களில் சிக்கிக் கொண்டு, பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தைப் பாதித்து, பல பிரச்சனைகளை வரவழைக்கும்.
ஆகவே ஈறுகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் உணவுகளைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்.
அந்தவகையில் தற்போது பற்கள் மற்றும் ஈறுகளில் ஆரோக்கியத்தை மேம்படுத்த சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- பால் எலும்புகளை வலிமைப்படுத்த உதவுவதோடு மட்டுமின்றி, பற்களின் எனாமலைப் பாதுகாக்கும். ஆகவே உங்கள் பற்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தினமும் பால் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
- காய்கறிகளான செலரி, கேரட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இவ்வாறு காய்கறிகளை பச்சையாக மென்று சாப்பிடுவதால் ஈறுகளின் வலிமை தூண்டப்படுவதோடு, பற்களின் ஆரோக்கியமும் பராமரிக்கப்படும்.
- ஆப்பிள் ஈறுகளின் ஆரோக்கியத்தை தூண்டுவதோடு, பற்களில் சொத்தையை உண்டாக்கும். ஆப்பிளை மென்று சாப்பிடும் போது, வாயில் எச்சில் சுரப்பு அதிகரித்து, வாயில் உள்ள அமிலத்தன்மை குறைந்து, வாய் துர்நாற்றமும் தடுக்கப்படுகிறது.
- கீரைகளான பசலைக்கீரை மற்றும் கேல் போன்றவை ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டவை. முக்கியமாக இவை வாய் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடியவை.
- மீன்களில் உள்ள ஒமேகா-3 மீன் எண்ணெய்கள் DHA மற்றும் EPA ஆகியவை ஈறு அழற்சி நோயான பீரியண்டோன்டிடிஸ் அபாயத்தைக் குறைக்கின்றது. எனவே டுனா, ட்ரௌட் மற்றும் காட்டு சால்மன் போன்றவற்றை எடுத்து கொள்ளலாம்.
- ஒரு கைளயவு பாதாம் சாப்பிட்டு வரலாம். ஏனெனில் நட்ஸ்களை மென்று சாப்பிடும் போது வாயில் அதிகளவு எச்சில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது வாயில் உள்ள பாக்டீரியாக்களை நீக்க உதவி புரிந்து, சொத்தை பற்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
- கிரான்பெர்ரியை ஜூஸாக உட்கொள்வதை விட நற்பதமாக அப்படியே சாப்பிடுவதே நல்லது. ஏனெனில் ஜூஸில் சர்க்கரை அதிகம் இருக்கும். இது பற்களுக்கு தீங்கை விளைவிக்கும்.
- ப்ளாக் டீயில் உள்ள பாலிஃபீனால்கள் வாய் துர்நாற்றத்தை எதிர்த்துப் போராட உதவும். மற்றும் இவை பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் குறைக்க உதவி புரிந்து, சொத்தைப் பற்கள் மற்றும் ஈறு நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.
- உலர் திராட்சை சாப்பிடும் போது பற்களில் ஒட்டிக் கொள்ளும் ஆனால் இதில் உள்ள குறிப்பிட்ட பைட்டோகெமிக்கல்கள் வாயில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்து, சொத்தைப் பற்கள் மற்றும ஈறு நோய்களைத் தடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வில் கண்டறிந்துள்ளனர். .




















