அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தை அகற்றிவிட்டு 18ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டுவருவதை ஏற்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த விடயம் தொடர்பில் நாட்டில் போதியளவு கருத்துப் பரிமாற்றங்கள் எவையும் இடம்பெறவில்லை.
முன்னைய அரசாங்கம் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டமைக்கு 19ஆவது திருத்தம் காரணமில்லை. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான கருத்து வேறுபாடே காரணம். எ
19ஆவது திருத்தத்திலிருந்து பின்னோக்கி செல்வது ஒரு தீர்வாக அமையாது. எனவே 19ஆவது திருத்தத்தில் உள்ள தவறுகளை சரிசெய்துகொண்டு அதனை தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும் என ஹிருணிகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.




















