பிரான்சில் ஓராண்டுக்கு முன் வீட்டை விட்டுச் சென்ற பிரித்தானிய பெண் குறித்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் எந்த தகவலும் கிடைக்காததால் குழப்பம் நீடிக்கிறது.
16 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் ஸ்டீவன் மற்றும் இரு பிள்ளைகளுடன் பிரான்சின் Charente பகுதியில் குடியேறினார், பிரிஸ்டலில் பிறந்த Karen Milsom (52). சுமார் ஓராண்டுக்கு முன், ஒரு நாள் கையில் கொஞ்சம் பணம் மற்றும் உடைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார் Karen.
வீட்டில் ஏதோ வாக்குவாதம் நடந்த நிலையில் வெளியேறிய Karen மீண்டும் வீடு திரும்பவேயில்லை.
வீட்டிலிருந்து வெளியேறி மூன்று வாரங்களுக்குப் பின் அவரது மொபைலிலிருந்து அவரது கணவருக்கு ஒரு செய்தி வந்துள்ளது.
வீட்டிலிருந்து 25 மைல் தொலைவில் உள்ள ஒரு இடத்தில் காரை நிறுத்தியிருக்கிறேன் என்று. உடனே காரை எடுக்க கணவர் செல்ல அங்கு கார் மட்டுமே இருந்திருக்கிறது, Karen இல்லை.
தற்போது பிரெஞ்சு பொலிசார் Karenஐ தீவிரமாக் தேடி வருகிறார்கள். மூன்று விடயங்கள் நடந்திருக்கலாம் என்று கருதுகிறார்கள் பொலிசார். ஒன்று, Karen புதிதாக ஒரு வாழ்வைத் துவங்குவதற்காக சென்றிருக்கலாம்.
இரண்டாவது, அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்பது. ஆனால், இளம் வயதில் Karenஉடைய தாயார் தற்கொலை செய்துகொண்டாராம், அவரைப் போலவே குழந்தைகளை விட்டு விட்டு தற்கொலை செய்துகொள்ளும் குணம் கொண்டவர் அல்ல Karen என்கிறார், அவரது கணவர்.
பொலிசாரும், அப்படி Karen தற்கொலை செய்துகொண்டிருந்தால் அவரது உடலாவது கிடைத்திருக்கும் என்கிறார்கள்.
மூன்றாவது, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் பொலிசார். ஆனால், அப்படி எதுவும் நடந்திருக்காது என்கிறார் ஸ்டீவன், என்றாவது ஒரு நாள் தன் மனைவி திடீரென வந்து தன் முன் நிற்பார் என்கிறார் அவர், என்றாலும் இப்போதைக்கு அவராலும் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.



















