மதுரையில் சுவாமிக்கு கற்பூரம் ஏற்றும்போது தவறி மேலே விழுந்ததில் 92 வயது மூதாட்டி தீயில் கருகி உயிரிழந்தார்.
மதுரை கீழமாட வீதியை சேர்ந்த 92 வயது மூதாட்டி பிரகதாம்பாள் கூட்டுக் குடும்பமாக அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை குடும்பத்தினரோடு சேர்ந்து வீட்டின் பூஜை அறையில் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தபோது எதிர்பாராத விதமாக மூதாட்டி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அவர் கையில் வைத்திருந்த கற்பூரத் தட்டு அவர் மீது விழுந்ததில் புடவையில் தீ பற்றி எரிந்து 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உடனடியாக குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




















