மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் உடலை எலி கடித்துள்ளதால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கிழக்கு வீதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் ஆறுமுகம், முருகன் ஆகியோர் கட்டட பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதில் கட்டப்பட்டிருந்த சாரத்தை கழற்றும் போது எதிர் பாராதவிதமாக கீழே விழுந்து இருவரும் மின்கம்பியில் சிக்கி படுகாயமடைந்தனர்.
பின்னர் அக்கம்பத்தினரால் மீட்கப்பட்ட இருவரும் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் துரதிஷ்டவசமாக ஆறுமுகம் வழியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மருத்துவமனையின் பிணவறையில் வைக்கபட்டிருந்த ஆறுமுகத்தின் கால் கட்டை விரல், மூக்கு பகுதியில் எலி கடித்துள்ளதால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


















