நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தலைமை நீதவான் பிரியந்த லியானகே இந்த உத்தரவை பிறப்பித்தார்.
தேர்தல் சட்டங்களை மீறியது, பொது நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மற்றும் இருவர் மீது பதிவு தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2019 ஜனாதிபதி தேர்தலில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த நபர்களை கொண்டு செல்வது தொடர்பாக பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது மற்றும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் பிடியாணை பிறப்பிக்கும்படி சிஐடியினர் நேற்று விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, அவரை பிடியாணை இல்லாமல் கைது செய்யலாமென சட்டமா அதிபர் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.



















