கோடீஸ்வர வர்த்தகரான பெண் வர்த்தகர் ஒருவர் செலுத்தி சென்ற காரின் முன் பாய்ந்து, அவரது கணவர் உயிரிழந்துள்ளார்.
பொல்கசோவிட்ட, வெலகும்புர வீதி நேற்று முன்தினம் (21) இந்த சம்பவம் நடந்தது.
உயிரிழந்தவர் பொல்கசோவிட்ட, வெலகும்புர வீதியில் வசிக்கும் ரினோஸ் இந்தூனில் பண்டாரா (42) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கோடீஸ்வர பெண் தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோடீஸ்வர பெண் தொழிலதிபரும், உயிரிழந்தவரும் ஏற்கனவே திருமணமானவர்கள். இருவரும் விவாகரத்தாகிய நிலையில், 3 வருடங்களின் முன் அறிமுகமாகி சட்டபூர்வமாக திருமணம் செய்து கொண்டனர்.
உயிரிழந்தவர் கடுமையாக போதைக்கு அடிமையானவர். பணம் கோரி மனைவியை அடிக்கடி தாக்கியுள்ளார். குடும்ப தகராறு முற்றி ஹதுதுவ பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் ஏற்கனவே பதிவாகியுள்ளன.
சம்பவத்திற்கு முதல்நாள் மாலை உயிரிழந்தவர், மனைவியிடம் பணம் கோரியதோடு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இரவு தொலைபேசியில் அவரை திட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் அவர் வீட்டின் ஜன்னலை உடைத்து வீட்டிற்குள் நுழைந்ததாக அந்தப் பெண் கஹதுடுவ போலீசில் புகார் அளித்திருந்தார்.
தொழிலதிபர் தனது மகளின் கணவரை அதிகாலையில் தனது மகளின் வீட்டிற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது, பொல்கசோவிட்ட சந்திக்கு அருகில் வீதியோரம் ஒளித்து நின்ற நபர், திடீரென காரின் முன் பாய்ந்துள்ளார். எனினும், பெண் தொழிலதிபர் காரை மறு திசையில் திருப்பி, விபத்திலிருந்து தப்பினார்.
இருப்பினும், அதேதினத்தில் வீட்டு பணிப்பெண் தொடர்பான அலுவலொன்றுக்காக பெண் தொழிலதிபர் சென்று கொண்டிருந்தபோது, பொல்கசோவிட்ட சந்திக்கு செல்லும் பிறிதொரு வீதியில், ஒளிந்து நின்று காரின் முன் பாய்ந்துள்ளார்.
கார் சில்லுக்கு அடியில் அவர் விழுந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பெண் தொழிலதிபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



















