யாழ் மாவட்டத்தில் உள்ள தனிமைப்படுத்தல் மையங்களில் இன்று (23) 3 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மினுவாங்கொட பகுதியை சேர்ந்தவர்களே யாழிலுள்ள தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். பலாலி தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து ஒருவர், விடத்தற்பளையிலுள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மருதங்கேணி கொரொனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர். தற்போது மருதங்கேணியில் 36 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.