துருக்கியில் நேர்ந்த நிலநடுக்கத்தால் சரிந்த கட்டடங்களின் இடிபாடுகளில் இருந்து 91 மணிநேரங்களுக்கு பிறகு 4 வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியின் மேற்கில் உள்ள ஈஜியன் கடல் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவானது.
மீட்பு பணிகள் தொடந்து இடம்பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதாவது நிலநடுக்கம் ஏற்பட்ட 91 மணி நேரத்திற்குப் பிறகு ஏஜியன் இஸ்மீர் மாகாணத்தின் பேராக்லி மாவட்டத்தில் அய்டா கெஸ்ஜின் என்ற நான்கு வயது பெண் குழந்தை இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டார்.
இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 107 ஆவது நபரான அய்டா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அய்டாவின் மீட்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மீட்புக் குழு உறுப்பினர் நுஸ்ரெட் அக்சோய், போராடும் இளம் பெண் கையை அசைப்பதைக் கண்டதாகக் கூறினார்.
வெள்ளிக்கிழமை நேர்ந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
#Turkey: 4-year-old girl rescued 91 hours after #quake https://t.co/AgfRZy3iPn pic.twitter.com/UGaiZaNojp
— ANADOLU AGENCY (ENG) (@anadoluagency) November 3, 2020