பிக்பாஸ் வீட்டில் பாலாஜியின் காதலுக்கு முற்றுப்புள்ளி என்று கூறப்பட்ட நிலையில், இருவரும் கொஞ்சிப் பேசிய காட்சி வெளியானது.
ஆரம்பத்தில் அமைதியாக காணப்பட்ட ஷிவானி தற்போது சற்று பேசவும், விளையாடவும் செய்கின்றார்.
இந்நிலையில் கடந்த வாரத்தில் பாலாஜி மற்றும் ஷிவானிக்கு இடையே ஒரு வகையான கெமிஸ்ட்ரி சென்று கொண்டு இருக்கிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ஒரு டாஸ்க் முடிந்த பின்பும் ஷிவானி, பாலாஜிக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தார்.
இவ்வாறு இருந்த நிலையில் இருவரும் சண்டையிட்டுக்கொண்டதாக நினைத்த பார்வையாளர்களுக்கு தற்போது வெளியான ப்ரொமோ காட்சி உச்சக்கட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ப்ரொமோ காட்சியில் பாலாஜி, ஷிவானி இடையே ரொமான்ஸ் சென்று கொண்டிருக்க இதனை அவதானித்த கேபி ஆஜித்திடம் புலம்புகிறார். இதற்கிடையே ஆஜித் நான் உள்ளே எண்ட்ரி ஆகி எல்லாவற்றையும் கெடுக்கிறேன் என்று கூறி உள்ளே வந்து அமர்கின்றார்.