தர்ப்பை புல்லானது, விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது. இதனால் தான் கிரகண காலங்களில் பரவும் நச்சுத்தன்மையை நீக்க, உப்பு கலந்த உணவுப் பொருட்களில் தர்ப்பையை போட்டு வைப்பார்கள்.
கும்பாபிஷேகத்தின் போது யாக சாலையில் உள்ள கும்பத்தின் ஆற்றலை பிம்பத்தில் ஒடுக்கும் கிரியையில் தங்கம், வெள்ளி கம்பிகளுடன் முக்கியமாக தர்ப்பைக் கயிற்றைப் பயன்படுத்துவார்கள்.
தர்ப்பையில் ஆண் தர்ப்பை, பெண் தர்ப்பை, அலி தர்ப்பை என மூன்று வகை உண்டு. ஆண் தர்ப்பை அடி முதல் முடி வரை சமமாக இருக்கும்.
மேல் பகுதி தடித்துக் காணப்படுவது பெண் தர்ப்பை. அடியில் தடித்துக் காணப்படுவது அலி தர்ப்பை. தர்ப்பையின் அடியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், நுனியில் சிவனும் வாசம் செய்வதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
கிரஹன காலங்களில் உணவு பொருட்களில் கதிர்வீச்சின்றி காக்க, தர்பையை பயன்படுத்துகிறோம். தர்ப்பைப்புல் இருக்கும் இடத்தில் துர்சக்திகளின் நடமாட்டம் இருக்காது.
தர்ப்பை புல் வீட்டில் இருந்தால் தீய சக்திகள் அண்டாது. முன்னோர்களுக்கு திதி கொடுக்கும்போதும், அம்மாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்கும்போதும் கையிலும் பிண்டத்தோடும் பயன்படுத்தப்படுவது, தர்ப்பை புல். அதற்கு அவ்வளவு மகிமை உள்ளது.
தர்ப்பை புல், இறைவனுக்கும், ஜீவனுக்கும் தொடர்புடைய பாலமாக கருதப்படுகிறது. தர்பை சுபத்தை, புனிதத்தன்மையை தருவது, எல்லா பாவங்களையும் போக்க வல்லது.
தர்ப்பை புல்லில் அதிகமான தாமிர சத்து உள்ளது. நமது உடலில், வெளியிலிருந்து உள்ளே புகும் தீமையைத் தடுக்கிறது. தர்பைக்கு அக்னிகற்பம் என்பது பெயர்.
இந்த புல், தண்ணீர் இல்லாவிட்டால் வாடாது. நீருக்குள் பலநாட்கள் இருந்தாலும் அழுகாது. ‘அம்ருத வீரியம்’ என்பது இதன் பெயர்.
அக்கிரஸ்தூலமுடையது பெண் தர்பை, மூலஸ்தூலம் உடையது அலி தர்பை, அடி முதல் நுனி வரை ஒரே சமமாக இருப்பது, ஆண் தர்பை. ஹோம குண்டங்களில், யாக சாலையில் இருந்து பிம்பத்திற்கும், கலசங்களுகும் மந்திர ஒலிககளை கடத்தி சக்தியை அளிக்கும்.