இந்தோனேசியாவில் உள்ள சில தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று பழைய ஸ்மார்ட் கைப்பேசிகளை திரட்டி வருகின்றனர்.
தற்போது உலகெங்கிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா பரவல் காரணமாக பல பிரதேசங்களில் மக்கள் வெளியில் நடமாடுவது முடக்கப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே ஒன்லைன் மூலமான கற்றல் செயற்பாடுகள் மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
எனினும் பல மாணவர்களின் ஏழ்மைத் தன்மை காரணமாக ஒன்லைன் கற்றற் செயற்பாடுகளில் பங்கு பெறுவதற்கு தேவையான ஸ்மார்ட் கைப்பேசிகள் அவர்களிடம் இல்லை.
இவ்வாறானவர்களுக்கு உதவும் பொருட்டே மேற்கண்டவாறு பழைய ஸ்மார்ட் கைப்பேசிகள் திரட்டப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.