இலங்கையின் இரண்டு விளையாட்டு வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதில் ஒருவர் தேசிய நிலை கூடைப்பந்து வீரராவார்.
விளையாட்டு மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் வைத்திய கலாநிதி லால் ஏகநாயக்க இதனை தெரிவித்தார்.
இரண்டு விளையாட்டு வீரர்களும் தமது வேலைத்தளங்களின் ஊடாக தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர், இதனையடுத்து ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்றுநர்களின் உடற்திறன் பராமரிக்க இணையம் மூலமான திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஏகநாயக்க கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக பல தேசிய விளையாட்டு வீரர்கள் இந்த ஆண்டு பல சர்வதேச நிகழ்வுகளில் பங்கேற்க முடியவில்லை.
அதே நேரத்தில் பல சர்வதேச நிகழ்வுகளும் அமைப்பாளர்களால் ரத்து செய்யப்பட்டன. எனினும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் பங்கேற்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இந்த ஆண்டு இறுதியில் தேசிய தடகள கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று வைத்திய கலாநிதி லால் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
ஒலிம்பிக்கிற்கான இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியளிக்க சர்வதேச பயிற்சியாளர்கள் அழைக்கப்படவிருந்தனர், எனினும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இந்த திட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.