புற்றுநோய் என்பது உடனடியாக திடீரென வரும் நோயல்ல. பல நாட்களாக நமது உடலில் இருந்து புற்றுநோய் செல்கள் பெருகிய பின்னரே நமக்கு தெரிய வருகிறது.
சில முக்கிய அறிகுறிகளை வைத்து தொடக்கத்திலேயே புற்றுநோய் இருப்பதை கண்டுபிடித்து மருத்துவரிடம் சென்றால் அது நலம் பெயர்க்கும்.
கட்டிகள்
சருமத்திற்கு அடியில் கட்டிகள் இருப்பதை போன்று உணர்ந்தால் அலட்சியமாக இருக்காமல் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும். சாதாரண கட்டிகள் புற்றுநோய்க்கான கட்டிகளாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சருமத்தில் அலர்ஜி
தோலில் சொறி போன்றவை ஏற்படுவது புற்றுநோய்க்கான அறிகுறியாகும். நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்கள் புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படும் போது இது போன்று ஏற்படும்.
நாள்பட்ட காயம்
நமது உடலில் ஏற்படும் காயமானது விரைவாக சரியாகவில்லை எனில் புற்றுநோய் செல்கள் வளர்ந்து கொண்டு இருப்பதாக அர்த்தம்.
வாயில் புடைப்புகள்
வாயின் உள்பகுதி அல்லது நாக்கில் திடீரென ஏற்படும் புடைப்புகள் கூட புற்றுநோய்க்கான ஒரு அறிகுறியே. இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே கட்டாயம் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
உணவினை விழுங்குவதில் சிரமம்
உணவினை விழுங்குவதில் சிரமம் ஏற்பட்டாலோ அல்லது பசியின்மை இருந்தாலோ அது புற்றுநோய்க்கான முக்கிய அறிகுறியாகும்.இதனால் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் சக்தியானது முற்றிலும் குறைந்து புற்றுநோயின் தாக்கமானது அதிகரிக்கும்.
நாள்பட்ட இருமல்
தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் இருப்பவர்களுக்கு தொடர்ந்து நாள்பட்ட இருமலானது இருக்கும். இருமலின் போது அதிக வலி இருக்கும், இப்படியான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனையை நாட வேண்டும்.