லண்டன் நகரம் கடுமையான மூன்றாவது அடுக்கு கட்டுப்பாடுகளுக்குள் மிக விரைவில் கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தரப்பு எச்சரித்துள்ளனர்.
மேயர் சாதிக் கான் நகரவாசிகளை அவர்கள் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தாமல் இருக்க உதவுமாறு கேட்டுக்கொண்டார்.
மட்டுமின்றி, இந்த குளிர்காலத்தில் மக்கள் கட்டுப்பாடுகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டால், பேரழிவு தரக்கூடிய அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று மேயர் கானின் செய்தித் தொடர்பாளர் எச்சரித்துள்ளார்.
டிசம்பர் 3 ஆம் திகதி வரை ஏழு நாட்களுக்கு லண்டனின் 32 மாவட்டங்களில் 24 இல் புதிய கொரோனா பாதிப்புகளின் வீதம் அதிகரித்துள்ளது என சமீபத்திய தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
தற்போது பிரித்தானியாவில் அமுலில் இருக்கும் அடுக்கு திட்டமானது டிசம்பர் 16 ஆம் திகதி அரசு அதிகாரிகளால் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
அரசாங்க புள்ளிவிவரங்களின் அடிப்படையில் லண்டன் நகரம் தற்போது ஒரு நாளைக்கு அதிகமான பாதிப்பு எண்ணிக்கைகளை பதிவு செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.




















