ஆசிரியரொருவர் தாக்கியதன் காரணமாக 11ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் கலென்பிந்துனுவெவ – ஹிம்புட்டுகொல்லேவ வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
வீட்டில் செய்துகொண்டு வரும்படி கூறிய பயிற்சிகளை செய்து முடிக்காமை காரணமாகவே ஆசிரியர் மாணவியை தாக்கியதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த மாணவியின் பெற்றோர் நேற்று மாலை கலென்பிந்துனுவெவ காவல் துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அத்தோடு மாணவி கலென்பிந்துனுவெவ பிரதேச வைத்தியசாலையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதோடு தாக்குதலை மேற்கொண்ட ஆசிரியரிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக கலென்பிந்துனுவெவ பொலிசார் தெரிவிக்கின்றனர்.




















