யாழ மாநகரசபை தேர்தலில் வி.மணிவண்ணன் வெற்றிபெற்றார்.
இன்று காலை 9.30 மணிக்கு கூடிய யாழ் மாநகரசபையில், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் புதிய முதல்வர் தெரிவு இடம்பெற்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இம்மானுவேல் ஆனால்ட் போட்டியிட்டார். திடீர் போட்டியாளராக களமிறங்குவதாக மணிவண்ணன் நேற்றிரவு அறிவித்தார்.
ஆனல்ட்டிற்கு ஆதரவாக 20 வாக்குகளும், மணிவண்ணனிற்கு 21 ஆதரவாக வாக்குகளும் கிடைத்தன.
ஈ.பி.டி.பியும் மணிவண்ணனை ஆதரித்தது.
யாழ் மாநகரசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள எம்.ஏ.சுமந்திரன் அணியை சேர்ந்தவர் என கூறப்படும் ஒருவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்களும் கலந்து கொள்ளவில்லை.



















