பேராதெனிய பல்கலைக்கழக பொறியியல்ப்பீட இறுதி வருட மாணவர்கள் எட்டு பேர் கோவிட் – 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
மாகாண சுகாதார திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பொறியியல் பீடத்தின் ஒரு மாணவன் கோவிட் – 19 தொற்றுக்கு உள்ளான நிலையிலேயே தற்போது எட்டு புதிய மாணவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
அவர்கள் கோவிட் – 19 சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.இதனையடுத்து 250 மாணவர்கள் தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளனர்.