புலிகள் கைது செய்த எமது இராணுவ வீரர்களுக்கு வெட்டுக்காயம் ஏற்படுத்தி கொன்றனர். அவர்களுக்கு உதவி, ஒத்தாசை புரிந்த சில தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு இராணுவத்தினர் திருப்பி அவ்வாறே செய்வார்கள் என்ற அச்சம் உள்ளது.
அதனால்தான் இராணுவ மருத்துவமனையில் கொவிட் தடுப்பூசி பெற மறுப்பது போல் தோன்றுகிறது என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கெஹெலியா ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
கண்டி அனிவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
உலகின் மிகவும் ஒழுக்கமான இராணுவம் என அங்கீகரிக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவம், மனிதாபிமான நடவடிக்கையின் போது தமது உயிரைப் பணயம் வைத்து ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயர்களைக் காப்பாற்றியது என்றும் அவர் கூறினார்.
உதவியளித்த குழு மீது தோல்வி அடைந்த குழு அவநம்பிக்கை கொள்ள வேண்டாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உட்பட இதர எம்.பிக்களிடம் கூற விரும்புகிறேன்.
பொது மக்களுடன் நெருக்கமாக பணியாற்றுவோருக்கு கொரோனா தடுப்பூசி கொடுக்கும் முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நிராகரிக்கக் கூடாது என்றும் கூறினார்.