ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக கலக்கி வரும் சூர்யகுமார் யாதவ் முதல் முறையாக இந்திய அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் ஜெர்சியுடன் அவர் இருக்கும் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், மும்பை அணிக்காக கடந்த சில ஆண்டுகளாகவே ஆடி வருபவர் தான் சூர்யகுமார் யாதவ்.
தற்போது 30 வயதை எட்டியுள்ள இவர், திறமை இருந்தும், இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார்.
கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணி கோப்பையை கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இவர் தான், பல போட்டிகளை வென்று கொடுத்திருக்கிறார்.
அப்படி ஒருவர் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தது ரசிகர்கள் பலருக்கும் வேதனையாக இருந்தது. ஒரு சில தொடர்களில் இவரின் பெயர் இல்லாமல் இருப்பதைக் கண்டு ரசிகர்கள் பலரும் பிசிசிஐ கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூர்யகுமார் யாத்வ் தெரிவு செய்யப்பட்டார். இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து தற்போது இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு சூர்யகுமார் யாதவ் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அதை மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், குறிப்பிட்டுள்ளது.
இதைக் கண்ட ரசிகர்கள் பலரும் நீண்ட நாள் ஆசை, இப்போது நிறைவேறியிருக்கிறது. வாழ்த்துக்கள் சூர்யா என்று கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.
https://twitter.com/mipaltan/status/1368433773591756809




















