ஜேர்மனியில் முழு வீச்சுடன் கொரோனாவின் மூன்றாவது அலை துவங்கிவிட்டதாக Robert Koch நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் மூன்றாவது அலை ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பதற்கான தெளிவான அறிகுறிகள் கிடைத்துள்ளன என்கிறார் Robert Koch நிறுவன தலைவரான Lothar Wieler.
ஜேர்மனியில், வியாழக்கிழமை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 14,356 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது சென்ற வியாழக்கிழமையை விட 2,400 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேர்மனியில், தொற்று வீதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதன்கிழமை நிலவரப்படி ஒரு வாரத்தில் 100,000 பேருக்கு 65.4 பேர் என இருந்த தொற்று வீதம், வியாழனன்று 100,000 பேருக்கு 69.1ஆக உயர்ந்துள்ளது.
திடீர் மாற்றம் பெற்றுக்கொண்டிருக்கும் வைரஸுக்கு எதிராக தடுப்பூசி திட்டம் போட்டி போட்டு வருவதாக தெரிவித்த Wieler, இலையுதிர் காலத்தை எட்டும்போது, 80 சதவிகிதம் மக்கள் கொரோனாவுக்கு எதிர்ப்பு சக்தியை பெற்றிருப்பார்கள் என நம்புவதாக தெரிவித்தார்.
அது வரையில், நாம் சுகாதார விதிகளை கைக்கொள்வது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.