தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை எப்போது கட்டுக்குள் வரும் என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இவர்களின் கணிப்பு படி வரும் மே மாதத்தில் கொரோனா கட்டுக்குள் வர வாய்ப்பு உள்ளதாம். அதேநேரம் இம்மாத உச்சம் தொடும் என்கிறார்கள்.
சீனாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் அடுத்த இரண்டு மாதத்தில் அதாவது மார்ச் மாதத்தில் மின்னல் வேகத்தில் பரவ தொடங்கியது. கொரோனா வைரஸ் பரவும் வேகம் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதன்பிறகு ஒவ்வொரு மாதமும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், கிட்டத்தட்ட 6 மாதங்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
கொரோனா பரவல் கடந்த செப்டம்பர் மாதம் கட்டுக்குள் வர தொடங்கியதால் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது. அதன் பிறகு கோவில்கள், சினிமா தியேட்டர்கள், பொழுது போக்கு பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் படிப்படியாக விலக்கப்பட்டது. ஜனவரி முதல் இயல்பு நிலை திரும்பியது.
இந்நிலையல் நாள்தோறும் 600 என்ற விகிதத்தில் ஏற்பட்ட பாதிப்பு தற்போது 4000 ஆயிரத்தை எட்டியுள்ளது பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளளது.
கொரோனா இரண்டாம் அலை வெகு வேகமாக பரவி வருவதால் தற்போது சில கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவல் இம்மாத இறுதியில் கொரோனா தொற்று உச்சத்தை தொடும் என்று சுகாதாரத்துறை கணித்துள்ளது. இதன் காரணமாகவே தமிழகத்தில் திருவிழா மற்றும் மதக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தியேட்டர்கள், ஓட்டல்கள், வணிகவளாகங்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. எனினும். மே மாதம் முதல் தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுக்குள் வரும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர்.
கொரோனா தொற்றை தடுக்க கண்டிப்பாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றினால் தமிழகத்தில் மே மாதம் முதல் கொரோனா கட்டுக்குள் வரும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.



















