சட்டவிரோத செயற்பாடுகளை நியாயப்படுத்தும் மலினமான அரசியலைக் கூட்டமைப்பு நிறுத்த வேண்டும் எனக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுயநலன்களுக்காகக் கிளிநொச்சி வலைப்பாட்டுப் பிரதேசத்தினைச் சேர்ந்த கடலட்டை பண்ணையாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கூறிய கூற்றுக்கு தன்னுடைய கண்டனத்தினை வெளிப்படுத்திய போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசியல் சாயம்பூசி நியாயப்படுத்துவதுடன், மக்களுக்குப் பயன் தரக்கூடிய அபிவிருத்தி திட்டங்களைத் தவறாகத் திசை திருப்புகின்ற மலினமான அரசியலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.



















