நாட்டில் மேலும் 3 மாவட்டங்களில் 9 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மொனராகலை ஆகிய மாவட்டங்களின் 9 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, யாழ்ப்பாணத்தில் பலாலி வடக்கு, மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்மடு மற்றும் மொனராகலை மாட்டத்தில் கெகிராவ, செவனகலை, பஹிராவ, ஹபரத்னவெல, ஹபுருகல, மஹாகம, இடிகொலபெல்லச ஆகிய கிராம சேவகர் பிரிவுகளே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, கடந்த 24 மணிநேரத்திற்குள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 414 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் தெரிவித்துள்ளார்.



















