மட்டக்களப்பில் பெண் ஒருவரை தனது சொகுசு வாகனத்தில் ஏற்றிச் சென்று பாலியல் லஞ்சம் கோரியதாக பிரதேச செயலாளர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அனுமதி பத்திரம் ஒன்றுக்கு சிபாரிசு கையொப்பம் வாங்க வந்த நபர் ஒருவரிடம் தான் கையொப்பம் இட வேண்டும் என்றால் பெண் ஒருவரை அழைத்து வரவேண்டும் என பிரதேச செயலாளர் கோரியுள்ளார்.
அதன் பின்னர் கொழும்பில் இருந்து ஒரு பெண்ணை வரவழைத்து பிரதேச செயலாளரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.
பிரதேச செயலாளரை சிக்க வைப்பதற்காக எடுத்த இந்த முயற்சியில் பிரதேச செயலாளருக்கு எதிராக பல வீடியோ ஆதாரங்கள் சிக்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது, குறித்த பெண்ணை தொடர்ச்சியாக வற்புறுத்தி வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இது தொடர்பான வீடியோ ஆதாரங்களை அந்தப் பெண் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிரதேச செயலாளர் இதுவரையில் பல லட்சக்கணக்கான அளவு லஞ்சம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.



















