சீனாவினுடைய செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதும் மட்டுப்படுத்துவதும், அல்லது இலங்கை அரசினுடைய மேலாதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்வதும் கடினமானதாகவே இருக்கும் என அமெரிக்க பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கீத பொன்கலன் தெரிவித்துள்ளார்.
எமது செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சீனா இலங்கையில் தனது பலத்தை கட்டியெழுப்பும் செயற்பாட்டின் திருப்பு முனையாக இந்த துறைமுகை நகர சட்டமூலம் பார்க்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 2009ஆம் ஆண்டு யுத்த நிறைவின் பின்னர் சீனா இலங்கையில் தன்னை பலப்படுத்த அதி தீவிரம் காட்டியது. 2009ஆம் ஆண்டின் பின்னர் இலங்கையில் எவ்வகையான சுதந்திரம் இருக்கின்றது என்பதையும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.




















