முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய போது உயிரிழந்த 16 வயதான சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணையின் தற்போதைய நிலை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை கோரியுள்ளது.
இது குறித்து பொலிஸ்மா அதிபர் மற்றும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்தபோது தீக்காயங்களுடன் உயிரிழந்த ஹிஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணை முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் உள்ளிட்ட தற்போதைய நிலைமை குறித்த அறிக்கையை ஜூலை 30க்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணையம் கோரியுள்ளது.