திருமண உறவில் தாம்பத்தியம் முக்கியமான ஒன்று. அதிலும், முதல் முறையாக தாம்பத்தியம் கொள்பவர்களுக்கு எல்லாமே புதிதாக இருக்கலாம்.
இந்த தாம்பத்தியத்தில் உள்ள மனதளவிலான இன்பத்திற்கு கூற்றுகள் மட்டும் போதாது அதனை விளக்குவதற்கு., ஏனெனில் அவ்வுளவு இன்பங்கள் உள்ளது.
மேலும், திருமணம் செய்ய ஜோதிடரை அணுகி நல்ல நேரம் பார்ப்பது வழக்கம். அது மட்டுமல்லாமல் சாந்தி முகூர்த்தத்திற்கும் சரியான நாள், நேரம் பார்த்து தம்பதிகள் உறவில் ஈடுபட வைப்பது பல காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
தாம்பத்தியம் வைத்துக் கொள்ள ஒரு குறிப்பிட்ட நாள் என்றால் நாம் ஜோதிடரிடம் கேட்கலாம். ஆனால் அதை தினமும் கேட்பது சரியிருக்காது….
அதுமட்டுமின்றி, குழந்தை வேண்டும் என நினைத்து அதற்காக உறவில் ஈடுபடக்கூடிய தம்பதிகள், எந்த நாளில் எந்த நேரத்தில் உறவு வைத்துக் கொண்டால் சரியாக இருக்கும் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
மேலும், பெண்ணுக்கு மாதவிடாய் உண்டான 5 நாட்களுக்கு பிறகும், அடுத்த 5 நாட்கள் குழந்தை கருத்தரிக்க அதிக சாத்தியக் கூறுகள் உண்டு. அதன் பின்னர் கரு முட்டை மூடிக் கொண்டு, அடுத்த சுற்றுக்கு தயார் ஆகிவிடும். எனவே அதையும் மனதில் வைத்துக் கொண்டு குழந்தை வேண்டுவோர் உறவில் ஈடுபடுவது பலன் தரும்.
அதனால் குழந்தை பாக்கியம் வேண்டுவோர் இந்த குறிப்பிட்ட நாளில், அதற்கான நேரத்தில் தாம்பத்தியம் வைப்பது நல்லது. சாஸ்திர முறைப்படி இரவில் மட்டும் தான் தாம்பத்தியம் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பகல் நேரத்தில் வைத்துக் கொள்வதால் சரியல்ல என கூறுகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு தினத்தின் போதும் ஜோதிட லக்கினங்களின் அடிப்படையில் தாம்பத்தியம் மேற்கொள்ளச் சரியான நேரம் இங்கு தரப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போம்.
திங்கள் கிழமை இரவு 10 மணி முதல் 11 மணி வரை மற்றும் நள்ளிரவு 1 மணி முதல் 3 மணி வரை.
செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி முதல் 1 மணி வரை தாம்பத்தியம் இருக்கலாம்.
புதன்கிழமை இரவு 8 மணி முதல் 10 மணி வரை மற்றும் 11 மணி முதல் 12 மணி வரை தாம்பத்தியம் மேற்கொள்ளலாம்.
வியாழக் கிழமை இரவு 11 மணி முதல் 2 மணி வரை தாம்பத்தியம் மேற்கொள்ளலாம்.
வெள்ளிக் கிழமை இரவு 8 மணிமுதல் 11 மணி வரை தாம்பத்தியம் மேற்கொள்ளலாம்.
சனிக் கிழமை இரவு 9 மணிமுதல் 10 மணி வரை மற்றும் 12 மணி முதல் 2 மணி வரை தாம்பத்தியத்தில் ஈடுபடலாம்.. ஞாயிற்றுக் கிழமை இரவு 9 மணி முதல் 12 மணி வரை தாம்பத்தியத்தில் ஈடுபடலாம்.