தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக நுழைந்த இளைஞன் ஒருவர் இன்று யாழ்ப்பாணம் குருநகரில் அடையாளம் காணப்பட்டார்.
25 வயதான இவர் நேற்று முன்தினம் நாட்டுக்குள் நுழைந்துள்ளார்.
இந்நிலையில் குருநகர் கிழக்கு, ரெக்கிளமேசன் பகுதியில் வீடொன்றில் அவர் இன்று பொலிசாரால் அடையாளம் காணப்பட்டார்.
12 வயதில் குடும்பமாக விமானம் மூலம் இந்தியா சென்ற குறித்த இளைஞர், தற்போது தந்தை உயிரிழந்து விட்ட நிலையில் , தாயார் சுகவீனமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் , குடும்ப கஸ்ரம் காரணமாக தொழில் செய்ய யாழிற்கு வந்ததாக அவர் கூறிய நிலையில், குறித்த இளைஞர் வீட்டில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.