தமிழ் சினிமாவில் லிஜெண்ட்டரி வில்லன் என்ற பெயரை பெற்று தன் நடிப்புத்திறமையால் அனைத்து ரசிகர்களையும் ஈர்த்தவர் நடிகர் ரகுவரன். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகர்கள் படத்தில் வில்லனாகவும் தோழன் கதாபாத்திரத்திலும் நடித்து கொடிக்கட்டி பறந்தார் ரகுவரன்.
ரகுவரன் கடந்த 2008ல் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவர்பற்றிய அனிபவங்களை பிரபலங்கள் தெரிவித்து பகிர்ந்து வருவதுண்டு. அந்தவகையில் பிரபல நடிகர் பப்ளு பிரித்திவிராஜ் அவர் பற்றி தகவல் ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
நடிகர் ரகுவரனுக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர் நடிகர் பப்ளு. ரகுவரன் வாழ்க்கையில், திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை இருந்தது என்று கூறியுள்ளார் பப்ளு. அவர் கனவாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.



















