இலங்கையில், நாளாந்தம் பதிவாகும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் புள்ளி விபரமொன்றினையும் வெளியிட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கடந்த 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட நாளாந்த தொற்றுநோய் அறிக்கைக்கு அமைய நாட்டில் கோவிட் தொற்றாளர்fளின் எண்ணிக்கை 40.3% இனால் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த 17 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையான ஒரு வாரத்தினுள் இலங்கையில், 35, 032 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனினும், உலக சுகாதார ஸ்தாபனம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட கடந்த 17 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையான ஒரு வார காலப்பகுதியினுள், இலங்கையில் 1,327 கோவிட் மரணங்கள் பதிவாகியிருந்த நிலையில் அது 34.7 % அதிகரிப்பை காட்டுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு நிலைமையில், புதிய தொற்றாளர்கள் பதிவாகின்றமை மற்றும் கோவிட் மரணங்களின் அதிகரிப்பு தொடர்பில் இலங்கை அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை உலக சுகாதார ஸ்தாபனத்தின் இந்த அறிக்கையினூடாக சுட்டுக்காட்டப்பட்டுள்ளது.