பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல். பல மாதங்களுக்கு பிறகு கதையில் பெரிய டுவிஸ்ட் ஏற்பட TRPயில் முன்னிலையில் வந்தது.
அதனை சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். கண்ணன்-ஐஸ்வர்யா இருவரும் எப்படி திருமணத்திற்கு பிறகு வாழுகிறார்கள் என்ற கதையை சில நாட்களாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தான் சீரியலில் ஒரு மாற்றம் நடந்துள்ளது. அதாவது ஐஸ்வர்யா வேடத்தில் நடிப்பவரின் ஆள் மாற்றம் நடந்துள்ளது.
இனி ஐஸ்வர்யாவாக ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்த சாய் காயத்ரி நடிக்க இருக்கிறாராம்.
திடீரென இந்த மாற்றம் ஏன் என்பது ஒன்றும் தெரியவில்லை.