ஐக்கிய தேசியக் கட்சி, சீன நாட்டு அரசாங்கத்திடம் நன்கொடை கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.
கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்று ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக இந்த உதவி கோரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ரணிலின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சீனா, விரைவில் ஒரு தொகுதி பொருட்களை அனுப்பி வைக்க உள்ளதாக வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
சீனாவிடமிருந்து கிடைக்கும் உதவிகளை வைத்தியசாலைகளுக்கு விநியோகம் செய்ய உத்தேசித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெற்றிகரமான முயற்சியான்மையாளர்களை உருவாக்க வேண்டியது அவசியமானது எனவும், கடந்த காலங்களில் உபாலி விஜேவர்தன போன்ற முயற்சியான்மையாளர்கள் மலேசியாவில் தோட்டங்களை கொள்வனவு செய்யும் அளவிற்கு திறமையானவர்களாக இருந்தார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.