கொரோனா வைரஸை தடுக்க மூக்கு வழி பயன்படுத்தும் ஸ்பிரே மருந்தை இங்கிலாந்து நாடு உருவாக்கியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் கோடி கணக்கான மக்கள் உயிர் இழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸில் இருந்து தற்காத்து கொள்ள அனைவரும் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளுங்கள் என்று நாடு முழுவதும் அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து மக்கள் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை புரிந்த கொண்டு தாமாக முன் வந்து தடுப்பூசியை செலுத்தி கொள்கின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் போக்ஸ்பயோ என்ற நிறுவனம் கொரோனாவை தடுக்க மூக்கு வழியாக செலுத்தும் ஸ்பிரே ஒன்றை உருவாக்கியுள்ளது.
அந்த மருந்தை இந்தியாவில் அறிமுகம் செய்ய அந்நாட்டு நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மூக்கு வழியாக செலுத்தப்படும் ஸ்பிரே தடுப்பு மருந்தில் 63% காக்கும் தன்மை உடையது.
முதல் கட்டமாக இந்த ஸ்பிரே மருந்தை 648 சுகாதார பணியாளர்களுக்கு சோதனை செய்து பார்த்ததாகவும் அந்த சோதனையில் பாதிப்பை தடுப்பதில் 63% செயல்திறனை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனை இரண்டு நாசிகளிலும் ஒருவர் செலுத்தி கொள்வதால் 6 முதல் 8 மணி நேரம் வரை வைரஸில் இருந்து பாதுகாப்பு கொடுக்கும் என்று கூறியுள்ளனர்.