இலங்கையில், சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டு மக்கள் மண்ணெண்ணெய் அடுப்பை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எனினும், தற்போது, அத்தியாவசிய பொருட்களுடன் சேர்த்து மண்ணெண்ணெய் அடுப்பின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளமையால், ஸ்ரீலங்கா அரசாங்கம் மீது மக்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.
அதற்கமைய, இலங்கையின் தலைநகர் கொழும்பை மையமாக வைத்து, எமது செய்திப்பிரிவு இன்றைய தினம் இந்த விலையேற்றத்தின் சாதக பாதக நிலைமைகளை ஆராய்ந்தது.